கர்த்தர் என் மேய்ப்பர் நான்
karthar en meyppar naan
கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடையேனே - அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
ஆத்துமாவை தினம் தேற்றிடுவார் நீதியின் பாதையில் நடத்திடுவார் மரண இருளெனும் பள்ளத்தாக்கில் நடப்பினும் கர்த்தர் காத்தென்னை நடத்திடுவார்
சத்துரு முன்பாக பந்தியை ஆயத்தம் செய்தார் எனக்காக - எனது தலை முழுவதும் அபிஷேகம் செய்திடுவார் என் பாத்திரம் நிறைத்திடுவார்
ஜீவனில் நன்மையும் கிருபையும் நிதமும் என்னை தொடருமே - கர்த்தரின் வீட்டினிலே நான் நீடித்த காலங்களாய் என்றும் மீட்பரில் நிலைத்திருப்பேன்