கர்த்தர் என் ஜீவன்
karthar en jeevan
கர்த்தர் என் ஜீவன் என் பெலனானவர் யாருக்கும் அஞ்சிடேன் என் நேரமும் அவரே எந்தன் ஒளியானவர் இரட்சிப்புமானவர் அவரேயாவார்
சத்ருக்களும் பகைஞர்களும் பொல்லாங்கு செய்ய நினைத்தோர்களும் என் மாம்சத்தைப் பட்சித்திட என்னையே நெருக்கின வேளைகளில்
கர்த்தரோ என் பக்கம் துணையாய் நின்று காத்தென்னை இரட்சித்தார் மாதயவாய் (2)
தந்தை தாயும் கைவிட்டாலும் கர்த்தர் என்றும் என்னைச் சேர்த்துக் கொள்வார் என் சத்ருக்கள் வெட்கினார்கள்
கன்மலை மேல் என்னை உயர்த்திடுவார் திடமனதோடு நான் காத்திருப்பேன் ஸ்திரப்படுவேன் அவர் கிருபையாலே (2)