கர்த்தர் அன்பே தூய அன்பே
karthar anbae thooya anbae
கர்த்தர் அன்பே தூய அன்பே பக்தர்கள் போற்றும் அன்பே - என்
இயேசுவின் அன்பு மா பெரிதே எப்படி பாடுவேனோ
1. ஆண்டவர் அன்பின் ஆழம் நீளம் அன்பின் அகலம் உயரம் கண்டேன் இயேசு பக்தருடன் சேர்ந்துணர்ந்தேன் இன்றதைப் பாடிடுவேன் என்
2. இந்த உலகத் தோற்றம் முன்னே அந்த மேலான அன்பினிலே மாசற்றார் நிறுத்த எம்மை மாதேவன் தெரிந்து கொண்டார் தம்முன்
3. என் முழு ஆத்மா மனதுடனே என் முழு சக்தி பலத்துடன் தேவனிடம் அன்பு கூர்ந்திடவே தேடியே நாட்டுவேன் என்
4. குற்றமில்லாத அன்புடனே மற்றவரை நான் நேசிக்க கற்பனையில் பிரதானம் ஒன்றே கைக்கொண்டு வாழ்ந்திடுவேன் - அவர்
5. சத்துரு வான மித்திரன் சோதரன் தோழனாய் நேசித்தீரே பாதம் பணிந்து மை வேண்டுகிறேன் பூரண அன்பருள்வீர் - திருப்
6. ஜீவனை தந்த அன்பதுவே தேவனின் சேவை செய்திடவே கர்த்தர் வருகையை கண்டிடவே காத்திருந்தேன் அடைவேன் என்
7. ஆவியின் வரங்கள் ஒன்பது வெ ஆவியின் நற்கனி ஈந்திடும் தேவி அருள் வரம் தேவை அதே தாகத்தைத் தீர்த்திடும் என்றும்