கர்த்தர் ஆசரித்த ஓய்வு மறவாதே
karthar aasaritha oyvu maravaadhae
1. கர்த்தர் ஆசரித்த ஓய்வு மறவாதே வாரநாளில் சிறந்த சோபித தினமே லௌகீக ஜோலி நீக்கி உன்னதக் களிப்பு விண்டல ஜோதியோடு இந்நாள் உதித்தது.
பல்லவி
வாழ்க வாழ்க! என்றும் வாழ்க! ஓய்வு தினமே! வாழ்க வாழ்க! என்றும் வாழ்க! ஓய்வு தினமே!
2. ஓய்வை ஆசரித்து உன்னதனைத் தொழு சீடர்க்கு யேசு சொன்னார் நானே ஜீவவழி ரட்சகரைப் பின்சென்று தாழ்மையாய் ஜீவித்தால் நித்தயமாய்ப் பாய்ந்தோடும் ஜீவதண்ணீர் ரூடவ்வார்.
பல்லவி
வாழ்க வாழ்க! என்றும் வாழ்க! ஓய்வு தினமே! வாழ்க வாழ்க! என்றும் வாழ்க! ஓய்வு தினமே!
3. பரிசுத்த இன்பம் பாலகர் யேசுவைப் பணிவுடன் கொண்டாடி வாழ்த்தித் தொழுவதே அளவிலாத் தயவே அன்பின் இரட்சகர் அருளிய நல்வாக்கு தேற்றுதே மனதை.
பல்லவி
வாழ்க வாழ்க! என்றும் வாழ்க! ஓய்வு தினமே! வாழ்க வாழ்க! என்றும் வாழ்க! ஓய்வு தினமே!