கர்த்தாவின் ஜனமே திரும்பிடுவீர்
karthaavin janamae thirumbiduveer
கர்த்தாவின் ஜனமே திரும்பிடுவீர் கர்த்தரின் சித்தத்தை உணர்ந்திடுவீர் கர்த்தரின் பாதையில் நடந்திடுவீர் கர்த்தரின் கிருபையால் நிறைந்திடுவீர்
பெந்தேகோஸ்தே நாளில் வந்தவரை இந்த வேளையில் நாம் துதித்திடுவோம்
சோதனைகள் நம்மை சூழும்போது அணுகாமல் காத்து விலக்கிடுவார்
தாகமுள்ள நம்மை திருப்தி செய்ய தனியாக வந்தவரை துதித்திடுவோம்
காத்திருக்கும் அன்பர் சேர்ந்திடவே நேர்த்தியான வீடு உமக்களிப்பார்
தீவினை யாவையும் விலக்கிடுவார் தேவைகளை உடன் தந்திடுவார்
நன்மையால் நிரப்பின தேவனையே நன்றியால் நிறைந்து துதித்திடுவோம்
கைத்தாளமுடன் கூடிடுவோம் பேரின்ப பாடல்கள் பாடிடுவோம்