கர்த்தாவை நம்புவோரை
karthaavai nambuvorai
1.கர்த்தாவை நம்புவோரை ஓர்க்காலும் கைவிடார், பொல்லாரின்சீறுமாற்றை வீணாக்கிப் போடுவார்; சன்மார்க்கரைப் பலத்த கையால் தயாபரர் ரட்சித்துத்தாழ்ச்சியற்ற அன்பாய் விசாரிப்பார்.
2.கர்த்தாவின் சித்தத்துக்கு கீழ்ப்பட்டடங்குவேன்; அப்போ நான் ஜீவனுக்கு நேரே நடக்கிறேன்; லௌகீக வாழ்வின் பாதை வேண்டாம், நான் இயேசுவை பின்பற்றி, இங்கே வாதை சகித்தால், மாநன்மை.
3. என் மேலேபாரமாக வரும் இக்கட்டிலே பராபரன் அன்பாக என்னோடிருப்பாரே; பொறுக்கிற வரத்தை அவரிடம் கேட்பேன், அவ்விதமாய் இக்கட்டை சகித்து வெல்லுவென்.
4. கசப்பும் கர்த்தராலே வரும், நான் பின்வாங்கேன்; ஜெபத்தில் ஆசையோடே விண்ணப்பம் பண்ணுவேன்; அப்போது தயவாக காப்பாரே, கைவிடார்; இக்கட்டு பெரிதாக போம் போது தேற்றுவார்.
5.அநேகர் ஆசைகொள்ளும் பொருளை வாஞ்சியேன்; கர்த்தாவின் வார்த்தை சொல்லும் மெய்ப் பொருள் நாடுவேன்; என் பொக்கிஷம், என் செல்வம், என் ஆஸ்த்திகிறிஸ்துவே; என் பாக்கியம், பேரின்பம், எல்லாம் என் மீட்பரே.
6.என் இயேசுவை நான் பற்றி தொடர்வேன் ஆவலாய்; என் சாபத்தை அகற்றி ரட்சித்தார் நேசமாய்; நான் தப்ப எனக்காக தம் ரத்தம் சிந்தினார்; எனக்கு ஜீவனாக ஜெயித்தழும்பினார்.
7. இஸ்தோத்திரம் செலுத்த மிகுந்த நியாயமாம்; ஏன், ஜீவனைக் கொடுத்த என் கர்த்தருக்கெல்லாம் ஆதீனமாவதாக; அவருக்கென்றைக்கும் பணிந்த பக்தியாக நான் கீழ்ப்படியவும்.