கர்த்தாவே உம்மில் நம்பிக்கையாக
karthaavae ummil nambikkaiyaaga
கர்த்தாவே உம்மில் நம்பிக்கையாக என்றும் அமர்ந்திருப்பேன் உமது கோலும் உமது தடியும் என்னை தேற்றிடுதே -2
1) உமது கிருபையிலே நான் என்றும் களிகூருவேன் உமது சிறகுகளால் என்னை மறைத்து கொள்ளும் -2
2) கண்ணின் மணிப்போல என்னை காக்கும் தெய்வமே துன்பங்கள் துயரத்திலே துணையாய் இருப்பவரே -2
3) உன்னத ஆவியாலே என்னை நிரப்பிடுமே அபிஷேக தைலத்தினால் என்னை நடத்திடுமே -2