கர்த்தாவே உம் பாதம் கருத்தோடு அமர்வது
karthaavae um paadham karuthodu amarvadhu
1. கர்த்தாவே உம் பாதம் கருத்தோடு அமர்வது நிலைத்திடும் பங்கல்லவோ - எனக்கு நாள் தோறும் உம் மகிமை கண்டு நான் களிகூர ஏங்குதே என் உள்ளமே - என்றும்
2. சுமந்தீரே என் பாவம் கல்வாரி சிலுவையில் உம்மோடு இணைந்திடவே - நாதா கல்வாரி காட்சியால் கரைந்திட்ட என் உள்ளம் உலகினை நோக்கிடுமோ - என்றும்
3. தாய் அன்பும் மாறிடும் ஒரு நாளில் கைவிடும் உம் அன்பிற்கிணை யாகுமோ - நாதா இவ்வுலகில் காண்கின்ற நிலையில்லா அன்புகள் என் உள்ளம் கவர்ந்திடுமோ - என்றும்
4. பரலோகப் பாதையில் பாடுகள் உண்டென்ற உம் வாக்கு நிறைவேறுதே - நாதா இவ்வுலகப் பாடுகள் உம்மில் உள்ள அன்பை என்னில் தணித்திடுமோ - என்றும்
5. ராஜாதி ராஜனும் தேவாதி தேவனும் என்றென்றும் நீர் தானே - தேவா என் வாழ்க்கைப் பாதையில் என்றென்றும் நடத்திட நீரன்றி யாரெனக்கு - என்றும்
6. கைவேலை இல்லாத நிலையான இராஜ்ஜியம் எனக்கென்று உருவாக்கினீர் தேவா இவ்வுலகில் காண்கின்ற அழிவுள்ளை மகிமையை என் உள்ளம் நாடிடுமோ - என்றும்