கர்த்தாவே பணிவிடை செய்யச்
karthaavae panividai seyyas
1. கர்த்தாவே பணிவிடை செய்யச் சோராமல் இருப்போம் எப்போதும் புதுப்பெலன் நாடி உம் பேரில் சாருவோம். உம்மோடு தங்கித் தரிப்பார்
பல்லவி
புதுப் பெலன் அடைவார். மேலே எழும்புவார் செட்டை அடித்துப் பட்சிபோல நடந்தாலும் ஓடினாலும் ஒரு போதும் சோரார்.
2. எப்பாடு துன்பம் நேரிட்டாலும் சகாயம் செய்கிறீர். மெய் விசுவாசம் ஸ்திரமாக்கிக் கை தாங்கி நிற்கிறீர். உம்மோடு தங்கித் தரிப்பார்
பல்லவி
புதுப் பெலன் அடைவார். மேலே எழும்புவார் செட்டை அடித்துப் பட்சிபோல நடந்தாலும் ஓடினாலும் ஒரு போதும் சோரார்.
3. எந்நாளும் உங்களோடு கூட நான் இருப்பேன் என்றீர் இவ்வாக்கை நம்பி வேலை செய்வோம் நீர் சித்தியாக்குவீர். உம்மோடு தங்கித் தரிப்பார்
பல்லவி
புதுப் பெலன் அடைவார். மேலே எழும்புவார் செட்டை அடித்துப் பட்சிபோல நடந்தாலும் ஓடினாலும் ஒரு போதும் சோரார்.