கர்த்தாவே நீர் செய்த நன்மையை
karthaavae neer seydha nanmaiyai
கர்த்தாவே நீர் செய்த நன்மையை என்றென்றும் நினைத்து நான் பாடுவேன்
இசைவான இணைப்போடு ஆலயத்தை அப்போஸ்தலர் தீர்க்கரின் அஸ்திபாரம் மூலைக்கல்லாம் இயேசுவோடே முன் திட்டமாய் எமக்களித்தீர்
உம் வாசஸ்தலங்கள் எத்தனையாய் மகிமையால் நிறைந்து இன்பமானதே முழங்காலில் நின்று முன்னேறி சென்று முத்தத்தோடே உம்மை வாழ்த்திடுவோம்
நீங்களே ஜீவனுள்ள தேவனுடைய ஆலயம் என்றே எம்மை அழைத்தீர் எங்களில் வாசம் பண்ணி எங்களில் உலாவி எங்களின் தேவனாய் இருப்பதினால்
ஆதியும் அந்தமும் இல்லாதவர் ஜோதி உருவமாய் வடிவமைந்தமவர் ஆராதிப்போரின் கல்நெஞ்சத்தை ஆலயமாக்கி உயர்த்திடுவீர்