கர்த்தாவே நாங்கள் நெஞ்சத்தில்
karthaavae naangal nenjathil
1. கர்த்தாவே நாங்கள் நெஞ்சத்தில் மெய் ஞானமற்ற மாந்தர்; நீர் புத்தியைத் தராவிடின் எப்போதும் புத்தியீனர்; உம்மால் உண்டான வேதத்தால் உம் ஆவியின் சகாயத்தால் நற்பாதை காண வேண்டும்.
2. வேதத்துக்காக தோத்திரம் உமக்குண்டாவதாக; உம் திரு வார்த்தையைத் தினம் எல்லாரும் பக்தியாக வாசித்து கேட்டு சிந்தித்து உட்கொள்ள நீர் கடாட்சித்து நல்லாவி நித்தம் ரூடவ்யும்.
3. பிதாவே! எங்கும் ஜீவனாம் உம் வார்த்தை செல்வதாக; ஆ! யேசுவே நீர் சென்றதாம் செந்நெறி செல்வோமாக நல்லாவியை எம் உள்ளத்தில் இறக்கி வார்த்தையால் அதில் நற்சீர் அளித்துக் காரும்.