கர்த்தாவே இறங்கும் பிரசன்னமாகுமே
karthaavae irangum pirasannamaagumae
1. கர்த்தாவே இறங்கும் பிரசன்னமாகுமே மெய்ப் பக்தர் நெஞ்சில் இப்பவும் வந்தனல் மூட்டுமே.
கர்த்தாவே இறங்கும் நற்சீரைத் தாருமே மா வல்ல க்ரியை காட்டவும் இந்நேரம் வாருமே.
2. கர்த்தாவே இறங்கும் நல் மீட்பர் நாமமும் மா சுடர் போல் ப்ரகாசிக்கப் பேரன்பை காட்டவும்.
3. கர்த்தாவே இறங்கும் இவ்வருள் வேதத்தை கேட்போரின் நெஞ்சில் பொழியும் தேவாசீர்வாதத்தை.
4. கர்த்தாவே இறங்கும் பேர் நன்மை செய்யுமே விண் மாரி பெய்ய மேன்மையும் உண்டாகும் உமக்கே.