கர்த்தாவே இப்போ
karthaavae ippo
1. கர்த்தாவே இப்போ உம்மை தொழுதோம் , ஓர்மித்தெழுந்து கீதம் பாடுவோம்; வீடேகுமுன் உம பாதம் பணிந்தே உம் ஆசீர்வாதம் பெற்றுச் செல்வோமே .
2. உம் சமாதானம் தந்து அனுப்பும் , உம் நாளை முடிப்போமே உம்மோடும் ; பாதம் பணிந்த எம்மைக் காத்திடும் , எப்பாவம் வெட்கம் அணுகாமலும்.
3. உம் சமாதானம் இந்த ராவிலும் ; இருளை நீக்கி ஒளி தந்திடும் ; பகலோராவோ உமக்கொன்றாமே எச்சேதமின்றி எம்மைக் காருமே .
4. உம் சமாதானம் ஜீவ நாள் எல்லாம் ; நீர்தொல்லை துன்பில் புகல் இன்பமாம் ; பூலோகத் தொல்லை ஓய அழைப்பீர் , பேரின்ப வாழ்வை அன்பாய் ஈகுவீர். ஆமேன் .