கர்த்தாவே என்னை மா அன்பாய்
karthaavae ennai maa anbaay
1. கர்த்தாவே என்னை மா அன்பாய் நீர் இந்த ராவிலும் பொல்லாங்கில்லாமல் சுகமாய் தற்காத்துக் கொண்டிரும்.
2. இருட்டிலேயும் தேவரீர் வெளிச்சமானவர்; மெய் இஸ்ரவேலைக் காக்கும் நீர் உறக்க மற்றவர்.
3. என்னால் உண்டான பாவத்தால் மனம் கலங்கினும் க்றிஸ்துவின் தூய ரத்தத்தால் என் நெஞ்சைக் கழுவும்.
4. இரக்கம் செய்த உமக்கே புகழும் நன்றியும் செலுத்துவேன் என் கர்த்தரே; என்னைத் தள்ளாதிரும்.