கர்த்தாவே என் பெலனே
karthaavae en pelanae
கர்த்தாவே என் பெலனே உம்மில் அன்பு கூர்ந்திடுவேன் (2) என் ஜீவனும் நீர் என் ஞானமும் நீர் என் ரட்சண்யக் கொம்பும் அடைக்கலம் நீர்
உமது வேதத்தின் அதிசயத்தை பார்க்கும்படி என் கண்களை (2) திறந்து வேதத்தை அருள்செய்யும் (2) உம் ப்ரமாணங்களை போதியும் (2)
உம் வசனம் என் கால்களுக்கு தீபமும் பாதைக்கு வெளிச்சமாமே (2) உமக்கு பயப்படும் ஏற்ற வாக்கை (2) என் இருதயத்தில் வைத்திடும் (2)
பூமியில் நான் ஒரு பரதேசி உம் கற்பனைகளை மறையாதேயும் (2) பரதேசியாய் நான் தங்கும் வீட்டிலே (2) உம் ப்ரமாணங்கள் கீதமாயின (2)
உம் வேதம் மகிழ்ச்சியாயில்லையாயின் நான் என் துக்கத்தில் ஆழ்ந்திருப்பேன் (2) உம் சாட்சிகள் எனக்கு இன்பமும் (2) என் ஆலோசனைக்காரருமாம் (2)
உம் கிருபையின்படி என்னை நினைத்து ரட்சிப்பினால் என்னை சந்தியும் (2) பூரண நாள் வரை அதிகரிக்கும் (2) சத்திய ஒளியால் நடத்திடுமே (2)