கர்த்தாவே என் பெலனே
karthaavae en pelanae
கர்த்தாவே என் பெலனே உம்மில் அன்பு கூர்ந்திடுவேன் துருகமும் நீர் கேடகம் நீர் இரட்சண்ய கொம்பும் அடைக்கலம் நீர்
மரணத்தின் கட்டுகள் சூழ்ந்த போதும் துர்ச்சனப் பிரவாகம் புரண்ட போதும் நெருக்கத்தின் மத்தியில் குரல் எழுப்ப உருக்கமாய் வந்து உதவி செய்தார்
தயை செய்பவனுக்கு நீர் தயையுள்ளவர் உத்தமனை நீர் உயர்த்திடுவீர் புனிதனுக்கு நீர் புனிதரன்றோ புதிய கிருபையின் உறைவிடமே
உம்மாலே ஓர் சேனைக்குள் பாய்வேன் உம்மாலே மதிலை தாண்டிடுவேன் சத்துருவை நான் தொடர்ந்திடுவேன் சதாகாலமும் ஜெயம் எடுப்பேன்
இரட்சண்ய கேடகம் எனக்கு தந்தீர் உமது கரம் என்னை உயர்த்தும் கர்த்தரை அல்லால் தேவன் இல்லை அவரே எந்தன் கன்மலையாவார்
பலத்தினால் என்னை இடைகட்டி மான்களின் கால்களைப் போலாக்கி நீதியின் சால்வையை எனக்கு தந்து உயர் ஸ்தலத்தில் என்னை நிறுத்திகின்றார்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Bm F#m A Bm Bm A G G F# Bm Bm F#m A Bm B G Bm Bm A G Bm Bm F#m A Bm B G Bm Bm A G Bm Bm F#m A Bm B G Bm Bm A G Bm Bm F#m A Bm B G Bm Bm A G Bm Bm F#m A Bm B G Bm Bm A G Bm