கர்த்தாவே எது மட்டும் வராமல் இருப்பீர்?
karthaavae edhu mattum varaamal iruppeer?
1. கர்த்தாவே எது மட்டும் வராமல் இருப்பீர்? மெய்ப்பக்தரின் ஆயாசம் நீர் நன்றாய் அறிவீர் மாஜோதி அருணோதயம் எந்நேரம் உதிக்கும் பேர் வாழ்வின் சுப தினம் எப்போது விடியும்?
2. தாசர் அநேகர் தூங்கி வீண்காலம் கழிப்பார் நீர் தோன்றிச் சிலர் மட்டும் காத்தெதிர்பார்க்கிறார் வராமல் எதுமட்டும் மா மணவாளனே தாமதிப்பீர்? ஆனேகர் நம்பாமல் போனாரே!
3. நல் மணவாட்டி தானும் மெய்வாழ்வை மறந்து தன் நாயகர் இல்லாமல் ஏந்கித் தவிக்கிறாள் ஆ! தாசர் தங்கள் தூக்கம் விட்டெழுந்தாவலாய் நீர் வர எதிர்நோக்கி நிற்கச் செய்யும் தேவா.