கர்த்தாவே ஆழங்களிலிருந்து
karthaavae aazhangalilirundhu
கர்த்தாவே ஆழங்களிலிருந்து உம்மை நோக்கி கூப்பிடுகிறேன் ஆண்டவா உந்தன் செவியைச் சாய்த்து என் விண்ணப்பம் யாவும் கேட்டருளும்
கர்த்தாவே நீர் அக்கிரமங்களைக் கவனித்தால் யார் நிலை நிற்பான் உமக்கு பயப்படும் படிக்கு மன்னிப்பு உண்டு உம்மிடத்தில்
கர்த்தருக்கு நான் காத்திருக்கிறேன் காத்திருக்கும் என் ஆத்மா என்றும் கர்த்தாவே உம்முடைய வார்த்தையை நான் என்றென்றும் நம்பி இருக்கிறேன்
எப்பொழுது விடியுமோ எனும் ஜாமக்காரரைப் பார்க்கிலும் வெகு அதிகமதிகமாய் என் ஆத்மா உமக்காய் என்றும் காத்திருக்கும்
இஸ்ரயேல் எல்லாம் யாவே தேவனை என்றென்றும் நம்பி இருப்பதாக அவரிடத்தில் திரண்ட மீட்பும் க்ருபையும் உண்டு என்றென்றுமே
கர்த்தர் இஸ்ரேலை அதன் சகல அக்ரமங்களினின்றும் மீட்பர் இது முதல் இஸ்ரயேல் அவர்க்கே என்றென்றும் காத்திருப்பதாக