கர்த்தாதி கர்த்தரைப்
karthaadhi kartharaip
கர்த்தாதி கர்த்தரைப் பணிந்து கொள்வதால் நிதம் கிருபை பெருகும்
பார்தலத்தில் பரிதபித்த பாவியென்னை மீட்டார் ஸ்தோத்திரம் என்றுமே கர்த்தர் இயேசு நாமமே எங்கும் ஓங்குமே
தேவகிருபை பெற்று நிதம் இத்தரையில் வாழ அத்தன் அழைத்தாரே நித்தம் அவர் நாமத்தின் மகிமைக்காகவே
பாடுபட்ட கர்த்தரை நம்பி வாழ்வதால் நிதம் தேவனின் கிருபையில் பெலப்பட்டு என்றுமே வாழலாம் அன்றோ
பரிசுத்தர் இயேசுவின் நாமமதை நம்பியே பார்தனில் வாழ்ந்திட கிருபை ஈந்த தேவனை ஏற்றிப் போற்றுவோம்
பாரில் இயேசு நாமமதை எங்கும் கூறிடவே கிருபை ஈந்த கர்த்தரை நன்றியுடன் அனுதினம் எங்கும் கூறுவோம்