கரம் பற்றி நடந்திடுவேன்
karam patri nadandhiduven
கரம் பற்றி நடந்திடுவேன் கர்த்தர் இயேசுவில் மகிழ்ந்திடுவேன் அவர் காட்டும் வழியில் உண்மையாய் நடந்து ஆவியில் மகிழ்ந்திடுவேன்
இராஜாதி இராஜாவுக்கே - மகிமை இயேசு ராஜனுக்கே இறங்கிடும் தேவ ஆவியே - என்னை நிரப்பிடும் வல்ல ஆவியே
சத்துரு கோட்டைகளை இயேசு இரத்தத்தால் ஜெயித்திடுவேன் சத்திய ஆவி துணைகொண்டு என்றும் புதுபெலன் அடைந்திடுவேன்
நெருக்கங்கள் வரும்போது - என் நேசர் என் பட்சம் உண்டு துதித்திடுவேன் என்றும் புகழ்ந்திடுவேன் அவர் நாமத்தில் ஜெயம் எடுப்பேன்
அற்புதம் நடந்திடுமே - என்றும் மாறிடா தேவ அன்பால் அல்லேலூயா பாடிடுவோம் - நம் அதிசய தேவனுக்காய்