கப்பல் கொந்தளித்தது
kappal kondhalithadhu
கப்பல் கொந்தளித்துப் பொங்க கப்பல் ஆடி செல்கையில் புயல் காற்று சீறி வீச பாய்க்கிழிந்து போகையில்
இயேசு எங்களிடம் வந்து கப்பலோட்டியாய் இரும் காற்றமைத்து துணை நின்று கரை சேரச் செய்திடும்
கப்பல் ஏறிப் போவோருக்கு கடும் மோசம் வரினும் பாறை மேல் முழக்கும் காற்று உமக்கெலாம் அடங்கும்
இருளில் நீர் பரம்ஜோதி வெயிலில் நீர் நிழலே யாத்திரையில் திசைகாட்டி சாவில் எங்கள் ஜீவனே
எங்கள் உள்ளம் உண்மை நோக்கும் இன்ப துன்ப காலத்தில் எங்கள் ஆவி உம்மில் தங்கும் இகபர ஸ்தலத்தில் - இருளில்