கண்விழிப்போலென்னை
kanvizhippolennai
கண்விழிப்போலென்னை கானகப்பாதையில் கண்டீரோ இயேசு பரா இதுகாறும் ஆட்கொண்ட கருணையின் பூமானே துதியேறும் நின் நாமமே
1. நிலையாக நிறுத்தவோ எனையே - பாச வலைவீசி அலைந்தேன் அணைத்தே நினைவிலும் செயலிலும் திருநோக்கம் நிறைவாக்க விலையேறும் மகிமைக்காக அழைத்தவரே! - கண்
2. அளவில்லா அபிஷேகம் தனிலே - உள்ளில் அழியாத சிருஷ்டியாக வளர அளவில்லா அருள் பொங்கும் அலை போல கிருபைகள் அளித்தென்னை யுமக்கென்றே அழைத்தவரே! - கண்
3. பிரித்து என்னை உரியவனாய் உமக்கே - மாறா பரிவோடு பரிசுத்தம் தரவே பரிசுத்தர்க்களித்ததோர் உபதேசம் நிலைநாட்ட புரிய நற்போராட்டம் அழைத்தவரே! - கண்
4. மறைவான திரு மன்னா வருந்தி - நாளும் நிறைவான ஜெயந்தன்னில் வளர்ந்து குறைவில்லா பிழையில்லா கரையில்லா மனையாக பிறை போல உதித்தோங்க அழைத்தவரே! - கண
5. கிறிஸ்தேசு உமைப் போல திகழ - என்றும் மரத்தினால் உனக்கென்றே பிழைக்க சிலுவையின் மகிழ்வாக அதில் மேன்மை மிக கொண்டே சிரசாம் நின் சரீரமாய் அழைத்தவரே! - கண்