கண்விழிக்கும் பாலகா
kanvizhikkum paalagaa
கண்விழிக்கும் பாலகா கடுங்குளிர் காலமா உன்னை தாலாட்ட சத்திரத்தில் ஒரு இடம் தரவில்லையா ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரராரோ
நீ படைத்த உலகத்திலே உனக்கே இடம் தராத வஞ்சகமான மனிதருக்குள் வசிக்க வந்தாயோ நீபடைத்த மனிதனே உன்னை படை எடுக்க வருகிறானென்ற செய்தி கேட்டு கண் கலங்கி அழுகின்றாயோ என்ற செய்தி கேட்டு கண் கலங்கி அழுகின்றாயோ
சாயலை இழந்தவரையும் சாபத்தால் இழந்தவரையும் மீட்பதற்காக தேடி வந்து சமீபமானாயோ சிலுவையில் ஒப்புக்கொடுத்து மறுபடியும் சாபத்தையே ஏற்றுக்கொள்ளும் மனிதனுக்காய் அழுகின்றாயோ சாபத்தை ஏற்றுக்கொள்ளும் மனிதனுக்காய் அழுகின்றாயோ கண்விழிக்கும் பாலகா கடுங்குளிர் காலமா உன்னை தாலாட்ட என் உள்ளத்தில் ஓர் இடம் தருகின்றேனே