கன்னி ஈன்ற செல்வமே
kanni eendra selvamae
கன்னி ஈன்ற செல்வமே இம்மண்ணில் வந்த தெய்வமே கண்ணே மணியே அமுதமே என் பொன்னே தேனே இன்பமே எண்ணம் மேவும் வண்ணமே என்னைத் தேடி வந்ததேன் ஆரிரோ ஆராரோ எங்கும் நிறைந்த இறைவன் நீ நங்கை உதரம் ஒடுங்கினாய் ஞாலம் காக்கும் நாதன் நீ சீலக்கரத்தில் அடங்கினாய் தாய் உன் பிள்ளை அல்லவா சேயாய் மாறும் விந்தை ஏன்
வல்ல தேவ வார்த்தை நீ வாயில்லாத சிசுவானாய் ஆற்றல் அனைத்தின் ஊற்றும் நீ அன்னை துணையை நாடினாய் இன்ப வாழ்வின் மையம் நீ துன்ப வாழ்வைத் தேர்ந்ததேன்