கண்ணீரோடு கர்த்தாவே
kanneerodu karthaavae
கண்ணீரோடு கர்த்தாவே உந்தன் முகம் தேடுவேன் தண்ணீர்த்தடாகமாய் மாறுது என் கண்களும் விண்ணப்பம் கேட்டிடுமோ
1. நள்ளிரவெழுந்தெந்தன் உள்ளத்தைத் வெள்ளம் போல் ஊற்றுவேன் உம் பாதத்தில் தள்ளிடுவீரோ எந்தன் வேண்டுதல் தாழில்லையே நின் தயைக்கென்றுமேஸ- கண்.
2. துருத்தியில் என் கண்ணீர் யாவையும் ஒருத்தி கருத்துடன் காண்கிறார் விருதாவா காதின் கண்ணீரே கிருபையால் என்னையே தாங்குமே - கண்
3. கூடாரம் நின் சந்நிதியில் என் கூக்குரல் வந்தெட்டிடுதே நிதம் கூரிருள் கண்ணீர் பள்ளத்தாக்கிலே சூரிய சோபையாய் நடத்துவீர் - கண்
4. கண்ணீரில் விதைத்த விதைகளை மண்ணில் நற்பலன் மாற்றுமே விண்ணில் நீர் வெளிப்படும் வேளையில் கண்ணிமைதனில் உமை காணவே - கண்
5. இம் மண்ணில் மறையும் இப்பாடுகள் விண் நித்திய மகிமைக்கீடாகுமோ? கண்ணின் மணிபோல என்னையே நண்ணியே வழுவாது காப்பீரே - கண்