கண்ணீரை ஊற்றிடுவோம்
kanneerai ootriduvom
கண்ணீரை ஊற்றிடுவோம் கருத்தாய் ஜெயித்திடுவோம் தேவனின் குரல் கேட்க பொறுமையாய் காத்திருப்போம் சோர்ந்து போகாமல் ஜெபிப்போம் - 4
1.மலை போல் சோதனைகள் வாழ்க்கையில் வந்திடலாம் மாறாத தேவனுண்டு மறவாமல் நடத்திடுவார்
2.துக்கங்கள் நேரிடலாம் விசுவாசம் குறைந்திடாதே நான்கு நாளானாலும் உயிரோடு எழுப்பிடுவார்
3.இவ்வாழ்க்கை வருத்தங்கள் தான் அவ்வாழ்க்கை சந்தோசமே அந்நாட்டில் சேர்திடவே கர்த்தரை வேண்டுவோம்
4.ஒரு இமைப் பொழுதினிலே மறுரூபமாக்கிடுவார் மண்ணான நம் சரீரம் மகிமையாய் மாற்றிடுவார்