கண்ணீர் ஆவி எனக்குத்
kanneer aavi enakkuth
கண்ணீர் ஆவி எனக்குத் தாரும் தேவா கதறி நான் அழுதுடுவேன் தேவா
குடித்து குடித்து குடும்பமே அழியுதே குறைவு பட்டு தினம் தினம் வாடுதே
இவர்களை மீட்டிட - சபையில் சேர்த்திட -2
அனாதையாய் ஜனக்கூட்டம் அலையுதே ஆதரிப்போர் யாரென்று கேட்குதே
சுவிசேஷ வாசல் எங்கும் அடையுதே சுகத்திற்காய் ஜனங்களெல்லாம் அலையுதே
இரட்சிக்கப்பட்ட சபைகள் இதை பார்க்குதே இரட்சகரே உம்மை மறந்து தூங்குதே
இவர்களை பாருமே - எழுப்புதல் தாருமே-2
காதல் தோல்வியால் ஜனம் சாகுதே கண்கள் இருந்தும் குருடாய் வாழுதே