கண்ணே கண்மணியே
kanne kanmaniyae
கண்ணே கண்மணியே கண்ணே தாலேலோ
1. தேவ பாலனாகவே வான லோகம் நீக்கியே மாடடையும் கொட்டிலிலே மைந்தனாக வந்தாயோ?
2. ஆதி வாக்கின் படியே நீதியும் தழைக்கவே ஆவலாய் இப்பூமியிலே அவதரித்த பாலனோ?
3. ஆயர் கூடி பணியவே வேந்தர் மூவர் வணங்கவே தூய அன்னை மடியிலே துயிலும் தேவ மைந்தனோ?
தாலேலோ தாலேலோ தாலேலோ தாலேலோ