கண்மணியே கண்மணியே
kanmaniyae kanmaniyae
கண்மணியே கண்மணியே நீ கலங்குவது ஏனோ பெண்மணியே பெண்மணியே நீ தியங்குவது ஏனோ கர்த்தர் இயேசு இருக்கின்றார் கண்மணிபோல் காத்திடுவார் நீ கலங்காதே
1. அடுப்பினடியில் கிடந்தாலும் பொன் சிறகாய் நீ இருக்க கருப்பாய் நீ இருந்தாலும் அழகாய் தான் நீ இருக்க பிரியமே ரூபவதியே என்று அழைக்கிறார் அந்த நேசரின் சத்தம் காதில் கேட்கிறதோ கலங்காதே ( 3 ) - நீ திகையாதே ( 3 ) நேசர் உன்னை என்றும் காத்திடுவார்
2. மாரிகாலம் சென்றது மழையும் பெய்து ஒழிந்தது பூமியிலே புஷ்பங்கள் அங்கங்கு காணுது பிரியமே ரூபவதியே நீ எழுந்து வா
3. அத்திமரம் காய்த்தது திராட்சை செடியும் பூத்தது குருவிகள் பாடும் காலம் உன் காலம் வந்தது பிரியமே ரூபவதியே என்று அழைக்கிறார்