கண்மணி போல காத்தவரே
kanmani pola kaathavarae
பல்லவி
கண்மணி போல காத்தவரே கண்ணுறங்காமல் காப்பவரே
பல்லவி
கருவறை தொடங்கி என்னை நடத்தினீரையா கடைசி வரைக்கும் இன்னும் நடத்துவீரய்யா
1. நான் கண்ட தரிசனம் அது வீணாய்ப் போகுமோ நீர் சொன்ன வார்த்தையும் நடவாமல் திரும்புமோ
ஐயா உம் வார்த்தைகள் எனக்காக பேசுதே இருளான பாதைகள் வெளிச்சமாய் மாறுதே
பல்லவி
ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே
பல்லவி
கருவறை தொடங்கி என்னை நடத்தினீரையா கடைசி வரைக்கும் இன்னும் நடத்துவீரய்யா
2. உம் கிருபை என்னை விட்டு விலகிப் போகுமோ உம் சமூகம் என்னை விட்டு தூரம் போகுமோ
நம்பி நான் வந்ததே நல்லவர் (இயேசுவே) உம்மையே நன்மைகள் யாவுமே பூரணமானதே