கண்மணி போல் உன்னை
kanmani pol unnai
கண்மணி போல் உன்னை கண் மலர்ந்து காப்பேன் கண்ணுறல் பாதையதனில் கண்ணால் நடத்துவேன்
1. வாக்குத்தத்தங்கள் நான் உண்மையுள்ளவரே ஆக்குவேன் திருநோக்கம் உந்தன் தானே தக்கதோர் உறுதுணை காவினில் நானே மிக்கதோர் கிருபையின் சாகரம் - கண்
2. வான்புவி ஒழிந்தாலும் என் ஆணை உனக்காய் இன்னமும் நிலைக்குதே விண்மதியாக என்னைப் போல் துணையேது இல்லையே மானே உன்னையே உள்ளங்கைகளில் வரைந்தேனே - கண்
3. இரத்தமே சொரிந்துன்னை மீட்டவர் நானல்லோ சித்தம் செய்ய ஆவி தந்தேன் பாராயோ நித்திய மொழிகளால் தேற்றிடுவேனே சத்தியர் எந்தன் முகம் நோக்குவாய் தேனே - கண்
4. ஆவியின் ஊழியம் தூயவர் சபையில் மேவியே பங்கடைய கிருபை செய்தேன் சேவிக்க காலமதில் அழைத்தேனே கேளாய் தாவியே வருவாய் என் வாக்கை நம்பிடுவேன் - கண்
5. நினையாத நேரத்தில் தந்திடுவேன் நான் மலையாம் சபைதனையே சேர்க்க என்னுடனே அனைத்து உன் துயர்தனை போக்கிடுவேனே உனை எந்தன் துணையென மாற்றிடுவேனே - கண்