கண்மணி போல் காப்பீர்
kanmani pol kaappeer
கண்மணி போல் காப்பீர் தேவா கன்மலை கோட்டையும் நீரே நாதா கண்மணி போல் காப்பீர் தேவா
உமது சமூகம் ஆனந்தம் பேரின்பம் பூரிப்பாய் பாடுவேன் களிகூர்ந்தாடுவேன்
1. துதிக்குப் பாத்திரர் நீரே தேவா என் பெலன் நீர்; உம்மில் அன்பு கூர்வேனே கர்த்தர் உம் பிரசன்னம் எப்போதும் என்னோடு நிலைத்திருப்பேனே அசைக்கப்படேனே
2. என் வழியைச் செவ்வையாக்கும் தேவா மான் கால்கள் போல் எந்தன் கால்களை மாற்றும் உம்மாலே சேனைக்குள் பாய்ந்து நான் செல்லுவேன் மதிலும் தாண்டுவேன் மாபரன் அருளால்