கன்மலையில் நிறுத்தி
kanmalaiyil niruthi
கன்மலையில் நிறுத்தி என்னை அழகு பார்த்த தெய்வமே காலமெல்லாம் கரம் பிடித்து வழி நடத்தும் தெய்வமே
என் தகப்பனே தந்தையே வாழ்வே நீர் தானய்யா -2 வாழ வைத்தவர் நீர் தானய்யா - 2
என் இலட்சிய கரையில் சேரும் வரைக்கும் கைவிடுவதில்லை என் முடிவுவரைக்கும் வாழ வைக்கும் மணவாளனே
பாவியாய் இருந்த என்னை மோசமாய் வாழ்ந்த என்னை நித்தமாய் வாழ வைக்க தேடி வந்தீரே நித்தமாய் வாழ வைக்க தெரிந்துகொண்டீரே -2
எத்தனையோ பேர் இருந்தும் எத்தனாய் வாழ்ந்த என்னை இரத்தத்தால் கழுவி என்னை தூக்கினீர் ஐயா இரத்தத்தால் மகனாக (ளாக)மாற்றினீர் ஐயா
சத்துருக்கள் என்கெதிராய் பாளையம் இறங்குகையில் என் தேவன் என்னோடு கை பிடித்தீரே என்னை தாங்கி நடத்தி உயர்த்தி வைத்தீரே என்னை வாழ வைத்து அழகு பார்த்தீரே