கன்மலையே புகலிடம் புயற்கால நேரத்திலே
kanmalaiyae pugalidam puyarkaala nerathilae
1. கன்மலையே புகலிடம் புயற்கால நேரத்திலே நல்லவையே நீ நாடிடு புயற்கால புகலிடம்.
இப்பாழ் நிலத்தில் மா கன்மலை கானல் மணலில் தணின் நிழல் மோட்ச பயணியின் துணைவன் புயற்காலப் புகலிடம்.
2. பகலில் நிழல் இரவில் அரண் புயல் ஒதுக்கிடம் பகைவரால் திகைக்காத புயற்கால புகலிடம்.
3. பெருவெள்ளம் சூழும்போது புயற்கால புகலிடம் தேவ அடைக்கலம் உண்டு புயற்கால புகலிடம்.
4. கன்மலையே நற்புகலிடம் புயற்கால நேரத்திலும் நீங்காத துணையாயிரும் புயற்கால புகலிடம்.