கன்மலையே கர்த்தாவே
kanmalaiyae karthaavae
கன்மலையே கர்த்தாவே நன்றி சொல்வேன் நல்லவரே - 2 நீர் இன்றி நான் ஏதைய்யா என் நிம்மதி நீர் தானய்யா - 2 இயேசய்யா
1) வாழ்கின்றேன் உமக்காகவே வாழவைத்தீர் இயேசய்யா - 2 கண்ணீரைத் துடைத்தீர் களிப்பாக மாற்றினீர் காலமெல்லாம் உம்மை துதிக்க வைத்தீர் (2) (செய்தீர்) நீர் இன்றி .... நீர் தானய்யா (2) இயேசய்யா
2) இக்கால பாடுகள் ஒன்றுமில்லை இனிவரும் மகிமை நாளில் -2 திரும்பவே மாட்டேன் திருப்பாதம் சேர்வேன் துயரமெல்லாம் மறந்து துதித்திடுவேன் - 2 நீர் இன்றி ... நீர் தானய்யா (2) இயேசய்யா கன்மலையே... நல்லவரே - (2) நீர் இன்றி .... நீர் தானய்யா (2) இயேசய்யா நிம்மதி நீர் தானய்யா -(2) இயேசய்யா