கன்மலை மீது என் கால்கள்
kanmalai meedhu en kaalgal
கன்மலை மீது என் கால்கள் நிறுத்தி அடிகள் உறுதி படுத்திடும்
மாயையாம் லோகத்தை மறந்திட மேலோக ஸ்தலத்தை நினைத்திட பட்ச முற்று எந்தன் பாவம் தீர்த்தீர் மாமன்னர் இயேசுவே ஸ்தோத்திரமே ஆனந்த கீதங்கள் பாடிடவே ஆத்தும நேசரே அருள் செய்யும்
துன்பங்கள் நிறைந்த உலகினில் துங்கவனே உந்தன் பாதம் சேர்வோம் பாடுகள் கஷ்டங்கள் நேரிடினும் பரமன் இயேசுவே தாங்கிடுவீர் ஆனந்த கீதங்கள் பாடிடவே ஆத்தும நேசரே அருள் செய்யும்
சோதனை சூழ்ந்திடும் வேளையிலே நாதனே உம்மையே நாடிடுவோம் அன்பரே உந்தனின் பாதுகாப்பில் அன்பரை என்றுமே நிறுத்திடுவீர் ஆனந்த கீதங்கள் பாடிடவே ஆத்தும நேசரே அருள் செய்யும்