கனிவான உந்தன் அன்பிலே
kanivaana undhan anbilae
கனிவான உந்தன் அன்பிலே நான் மகிழ்வேன் என் இயேசுவே இனிமையான உம் வார்த்தையில் நான் உருகிப்போவேன் என் தேவனே-2
என் மனதில் நிறைவான உம்மை போற்றிடுவேன் என் இயேசுவே-2-கனிவான
1.திரளான செல்வம் பெரும் புகழை விடவும் அதிசயமானது உம் நாமமே இனிக்கும் தேனின் ஊற்றை விடவும் மதுரமானது உம் நாமமே-2
சமர்ப்பணமோடு உம் அருகில் நின்று நிரந்தரம் உம்மை ஆராதிப்பேன்-2-கனிவான
2.சோர்ந்து போன என் வாழ்விலே ஒளியான உம்மை உயர்த்துவேன் நான் கண்ணீரினால் உம் பாதங்கள் கழுவி மனதார உம்மை துதித்திடுவேன்
உம் கிருபையால் முடிந்ததை மறந்து மறுபடி உம்மில் செழிப்பாவேன்-2-கனிவான