கண்காணா தொலை தூர
kangaanaa tholai thoora
கண்காணா தொலை தூரதரிசனம் என்னென்ன திரையில் கண்டேன் கருவாக உருவான அந்த கனவு நிறைவாக வாழ்ந்திடுவேன்
ஆளப்பிறந்தோம் சோதனை ஜெயிப்போம் சாதனையாளர் சரித்திரம் படைப்போம் அறுவடை சேனை அதிசயம் காண்போம் ரிஷியா நாமே ரிஷியா
எண்ண இயலாத மக்களின் கூட்டம் மன்னவரை இன்று தரிசிக்க வேண்டும் சொல்ல இயலாத துயர் மறைந்து சுபிட்சம் பெற்று இன்று மகிழ வேண்டும்
இதய மொழிகளில் இயேசுவை சொல்ல இளைஞரணி இன்று புறப்பட வேண்டும் வறுமை வன்முறை சாதி கலவரம் ஆழ் கடலில் ஆழ்த்திட வேண்டும