கனத்திற்கும் மகிமைக்கும்
kanathirkum magimaikkum
கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே உம்மை துதித்து பாடுகிறோம் கிருபை பெருகுதப்பா - உங்க மகிமை இறங்குதப்பா ஆராதனை ஆராதனை (2)
1. இரண்டு மூன்று பேர்கள் ஒரு மனமாய்த் துதித்தால் நான் இருப்பேன் என்றீரே - என் துதியில் வாழ்பவரே ஆராதனை ஆராதனை (2)
2. அநேக ஸ்தோத்திரத்தில் உம் கிருபை பெருகுதப்பா உங்க கிருபை பெருகும்போது - உங்க மகிமை விளங்குதப்பா ஆராதனை ஆராதனை (2)
3. உம்மை மகிமைப் படுத்துகிற எந்த ஸ்தானத்திலும் நீர் இறங்கி வந்திடுவீர் - எம்மை ஆசீர்வதித்திடுவீர் ஆராதனை ஆராதனை (2)