கல்வாரியில் தொங்கும் இயேசுவின்
kalvaariyil thongum yesuvin
கல்வாரியில் தொங்கும் இயேசுவின் அன்பிற்கு ஈடாக எதுவுமில்லை - 2 எந்தன் பாவங்கள் போக்கிடவே இந்த பூலோகம் வந்தாரைய்யா எந்தன் சாபங்கள் நீக்கிடவே இந்த பூலோகம் வந்தாரைய்யா - 1
பாவம் அறியாத அவரே பாவம் செய்த எனக்காய் - 2 முள்முடியும் காயங்களும் சிலுவையையும் அவர் ஏற்றுக் கொண்டார் - 2
பரிசுத்தர் ஆன அவரே பாவியான என்னையும் - 2 நேசித்ததால் மன்னித்ததினால் அவர் மரணத்தை ஏற்றுக் கொண்டார் - 2
சிங்காசனத்தில் இருந்தவர் என்னையும் நோக்கினாரே - 2 என்னை மீட்டிடவே என்னை காத்திடவே அவர் தன்னையே தியாகம் செய்தார் - 2