கல்வாரியில் காணும்
kalvaariyil kaanum
கல்வாரியில் காணும் இவன் யார் சொல்லொண்ணா துயர் அடைந்தோர் உலக தோற்ற முதல் இவரே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி
அவர் தாமே இவர் தாமே கல்வாரி மலையின் மீது ஜீவன் வைத்த தேவ அன்பே
நித்திய பிதா இவரோ சத்தியமும் கிருபையும் தாகம் தீர்க்கும் ஜீவ நதியே தாவீது கோத்திரம் தந்த விளக்கோ - இவர்
அழைக்கப்பட்டோர் ஆணையாலே அடைய நித்திய சுதந்தரமே அன்பு நிறைந்தவர் பெறுவதற்கு அழிவில்லா தேவ மத்தியஸ்தரோ - இவர்
மரித்து உயிர் த்து மாறாதவர் மா பிரதான ஆசாரியர் முற்று மூடிய இரட்டை தரவே முதல்வன் முன்னே பரிந்து நிற்போர் - இவர்
சீயோன் மலை மேல் நிற்போர் இவரே சிறந்த நேசர் இவரே காண்பீர் சேவிப்போம் திரு முகத்தை தினமும் கண்டு அவரில் மகிழ்ந்தே - இவர்