கல்வாரியன்பே உம்மை
kalvaariyanbae ummai
கல்வாரியன்பே உம்மை நான் நேசிக்கிறேனே என்றென்றுமே கல்வாரியில் உம் பிரசன்னத்தை நோக்கிப் பார்த்து நான் பூரிக்கின்றேன்
எத்தனையோ அன்பை நான் பார்த்தேனே இந்த அன்பினை நான் எப்படி பாடுவேன என் நேசரே! என் அன்பரே! என்ன பதில் நான் செய்திடுவேன்
1. முட்கிரீடம் தலையில் சூட வேதனையால் தவித்திட்டீரே கொடூரவன் மார்பில் குத்த இரத்தமும் நீரும் ஓடி வருதே
2. தம் தலையும் மரத்தில் தொங்க தாகத்தாலே தவித்திட்டீரே காடியையும் கசப்பையும் தாகத்திற்கு கொடுத்திட்டானே
3.நேசித்தவர்களின் அன்பைப் பார்த்தேன் நேசரின் அன்பிற்கு வரவில்லையே ஆத்துமாவைத் தேற்றும் நேசர் ஆனந்தத்தால் நிறைக்கின்றாரே