கல்வாரியே கல்வாரியே கல்மனம்
kalvaariyae kalvaariyae kalmanam
கல்வாரியே கல்வாரியே கல்மனம் உருக்கிடும் கல்வாரியே 2
பாவி துரோகி சண்டாளன் நானாயினும் - 2 பாதகம் போக்கி பரிவுடன் இரட்சித்த - 2
பாவியை மீட்கவே நாயகன் இயேசு தம் - 2 ஜீவனின் ரத்தத்தை சிந்தின உன்னத - 2
நான் எனக்காக ஆதரவற்றோராய் - 2 பாதகர் மத்தியில் பாதகன் போல் தொங்கும் - 2
முள்முடி சூடியே மூன்றாணி மீதினில் - 2 கள்ளனைப்போல என் காவலர் தொங்கிடும் - 2
சர்வம் படைத்தாளும் சொர்லோக நாயகன் - 2 நிர்ப்பந்தக் கோலம் நிற்பதை சகிப்பேனோ - 2
எண்ணும் நன்மை யேதும் என்னிலே இல்லையே - 2 பின்னை ஏன் நேசித்தீர் என்னை என் பொன்நாதா - 2
இவ்வித அன்பையான் எங்குமே காணேனே - 2 எவ்விதமிதற்கீடு ஏழை யான் செய்குவேன் - 2