கல்வாரி சிலுவையிலே
kalvaari siluvaiyilae
கல்வாரி சிலுவையிலே கள்வர்கள் நடுவினிலே -2 கர்த்தன் இயேசு எனக்காகப்பட்ட பாடு அவமானங்கள் -கல்வாரி
நினைத்து நினைத்து துதிக்கின்றேனே உம்மை நோக்கி பார்க்கின்றேனே -2 நன்றி நன்றி ஐயா…. நன்றி இயேசய்யா -2
1. பாவ சாப ரோகங்கள் யாவும் சிலுவையிலே சுமந்து நீர் தீர்த்தீர் -2 உந்தன் தழும்புகளால் பூரண சுகமானேனே சிந்தின இரத்தத்தினால் மீட்பினை பெற்றேனே -2 -நினைத்து
2. எத்தனையோ துரோகம் நான் செய்தேன் இத்தனை என் மேல் அன்பு வைத்தீரே-2 எத்தனை என்னையுமே உத்தமனாக்கினீரே சிந்தின இரத்தத்தினால் மீட்பினை பெற்றேனே-2 -நினைத்து