கல்வாரி சிலுவையில்
kalvaari siluvaiyil
1. கல்வாரி சிலுவையில் திரு இரத்தமே கிருபையின் நிறைவாகப் பாய்ந்திடுதே கர்த்தர் அன்பின் நல் ஜீவனுமே கருணையாய் அளவின்றி வழிந்தோடுதே
கிருபையின் சிகரம் இயேசுவே மறைவிடம் ஏழைக்கும் நீரல்லவோ திருப்பாதம் அண்டை வாழ்த்திடுவேன் கிருபாசனம் உம்மை அடைந்திடுவேன்
2. நம் பாவ சாபத்தின் மரணமத்தை சிலுவையின் மரணத்தால் பரிகரித்தார் ஜீவனும் அழியாமை யுகாயுகமாய் ஈந்திடும் நேசரின் மா கிருபை - கிருபை
3. நம் வியாதி பெலவின நேரத்தில் அவர் மாறா பெலன் தாம் விளங்கிடும் கல்வாரி ஜீவன் குணமடைய அற்புத கிருபையும் வெளிப்படுதே - கிருபை
4. பாரினில் பாதகர் அந்நியராக அலைந்திடும் நமக்காக மரித்தார் மகிமையில் அவருடன் நிறுத்திடவே மரணத்தை ருசித்தார் கிருபையினால் - கிருபை
5. ஜீவனும் புதிதான வழிதனையே திறந்தார் பரிசுத்தர் மரணத்தினால் சீயோனின் பாதையில் ஜெயம் அடைய இரக்கமும் கிருபையும் பெருகிடுதே - கிருபை