கல்வாரி சிலுவை பாடை
kalvaari siluvai paadai
கல்வாரி சிலுவை பாடை நினைக்கையில் உள்ளம் ஏங்குதே, துயரம் மாறுதே, அந்த கல்வாரி நினைக்கையில் - 2 அன்பே என் இயேசுவே என் நெஞ்சமே என் இயேசுவே என் உயிரே என் இயேசுவே எனக்கெல்லாம் நீரே என் இயேசுவே.. என் ஆவி ஆத்மா அர்பணித்தேன் - 2
கலங்கிடும் இருதயமே, கேளு நான் சொல்வதை கேளு - 2 உனக்குண்டு இயேசு உண்டு, கவலை உனக்கு வேண்டாம் - 2 அன்பே என் இயேசுவே என் நெஞ்சமே என் இயேசுவே என் உயிரே என் இயேசுவே எனக்கெல்லாம் நீர் தானே என் இயேசுவே என் ஆவி ஆத்மா அர்பணித்தேன் - 2
துடித்திடும் ஜாதியை, தேவன் அண்டை நீ செல் - 2 கவலையில்லை கஷ்டம் இல்லை , துயரம் உனக்கில்லை - 2 அன்பே என் இயேசுவே.. என் நெஞ்சமே என் இயேசுவே.. என் உயிரே என் இயேசுவே எனக்கெல்லாம் நீரே என் இயேசுவே என் ஆவி ஆத்மா அர்பணித்தேன் - 2
தயங்கிடும் ஜனமே, இயேசுவை நோக்கி பார் - 2 அழுகை வேண்டாம் , துயரம் வேண்டாம், புலம்பல் உனக்கு வேண்டாம் - 2 என் நெஞ்சமே என் இயேசுவே என் உயிரே என் இயேசுவே என் இரத்தமே என் இயேசுவே எனக்கெல்லாம் நீரே இயேசுவே என் ஆவி ஆத்மா அர்பணித்தேன் - 2