கல்வாரி சிலுவை நாதா
kalvaari siluvai naadhaa
கல்வாரி சிலுவை நாதா காரிருள் நீக்கும் தேவா
பல்வினை பலனாம் பாவம் புரிந்தவர் எமைக்கண் பாரும் (2) - கல்வாரி
மன்னுயிர் மீட்கும் அன்பால் தன் உயிர் மாய்த்தாய் அன்பே மன்பதை மாந்தர் முன்னால் தரணியை இழுத்தாய் நின்பால் (2) - கல்வாரி
தூயவன் நின்னை கண்டோர் தீ உள்ளம் தெளிந்தே நிற்பார் சேய் உள்ளம் தந்தாய் அருளாய் வாய் உள்ளம் தந்தேன் புகழாய் (2) - கல்வாரி