கல்வாரி பாதையில் கலங்குகின்றார்
kalvaari paadhaiyil kalangugindraar
கல்வாரி பாதையில் கலங்குகின்றார் கர்த்தர் இவரே பொல்லாத மாந்தரோ பேசுகின்றார் நிந்தனை நிந்தனையாய் கல்வாரி மாமலை ஓரம் கோரக் காட்சி கண்டேனே கண்ணில் நீர் ததும்பிடவே கர்த்தர் இயேசு செல்கின்றாரே
எருசலேமின் வீதிகளில் இரத்த வெள்ளம் பாய்ந்திடுதே இருள் கோர நிந்தனையாய் உருக்குலைந்தே செல்கின்றாரே
சிலுவை தன் தோளதிலே சிதறும் தன் வேர்வையிலே சிறுமை அடைந்தவராய் பரிசுத்தர் போகின்றாரே
மண்ணின் மானிடர் துயரம் தன்னை தாங்கும் தந்தை இவர் கண்ணில் நீர்த் ததும்பிடவே விண்ணின் தேவனை அழைத்தார்
மரணத்தை வென்றிடவே மனு கோலம் கொண்ட இவர் அருள் வாழ்வு தந்திடவே அடைந்தார் . இந்நிந்தனையே