கல்வாரி பாதை என்
kalvaari paadhai en
கல்வாரி பாதை என் வாழ்வில் கண்டேன் உயர்வானாலும் தாழ்வானாலும் துயரானாலும் எது வந்த போதும் அவர் வந்து காப்பார் கல்வாரிப் பாதை நான் செல்லுவேன்
கால் கரம் மீதினில் ஆணிகள் பார் விலாவின் காயத்தில் இயேசுவைப் பார் தேவனின் அன்பு குருதியாய் மாறி கல்வாரியில் நின்று ஓடுது பார்
கோரமாம் கல்வாரி காட்சியைப் பார் கல்மனம் உருகிடும் இயேசுவைப்பார் கோரமாம் சிலுவை மீதினில் தேவன் என் பாவம் நீக்கிட ஜீவன் தந்தார்.
பாவத்தின் சம்பளம் மரணமே பாவத்தைச் செய்பவன் மிருகமே பாவத்தை விட்டு இயேசுவை ஏற்றால் சொல்லி முடியாத பேரின்பமே