கல்வாரி நேசர்
kalvaari nesar
கல்வாரி நேசர் காணுவாய் கனிந்த தம் உள்ளம் சோகமாய் கரங்கள் காட்டி அழைக்கின்றார் கருத்தில் கொள்ளாயோ - (2)
1 தம் பாதம் ஏகும் மனிதனை தள்ளேன் என்றியம்பினார் தன் மேல் உன் பாரம் சுமந்தவர் துன்பங்கள் அடைந்திட்டார் (2)
2 கணக்கில்லா பாவம் செய்த நீ இணங்கும் இவ் வேளையில் உனக்கில்லா அமைதி தந்திடுவார் இயேசு உன்னை அழைக்கிறார் (2)
3 உற்றோர் பெற்றோரும் தள்ளினும் தள்ளாத நேசரே தள்ளாடி சென்று ஏறினார் கொல்கொதா மேட்டிலே (2)